என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மதுரை வடக்கு தொகுதி"
மதுரை:
மதுரை வடக்குத் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.67.36 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர் தலைமையில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா இன்று திறந்து வைத்தார்.
மதுரை வடக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட முனியாண்டி கோவில் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும், சத்தியமூர்த்தி ஜீவா தெருவில் ரூ.6.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும், சத்தியமூர்த்தி பிரதான தெரு மற்றும் தெற்கு குறுக்குத் தெருவில் தமிழ் நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.27.56 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும், ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
மேலும் சர்ச்ரோடு மற்றும் சக்திமாரியம்மன் கோவில் தெருவில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக்சாலையினையும், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தெருவில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9.60 லட்சம் மதிப் பீட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து சுத்திகரிப்பு குடிநீர் எந்திரம் பொருத்தப்பட்டு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1000 லிட்டர் கொள்ளளவு உள்ள குடிநீர் சுத்திகரிக்கப்படுகிறது.
வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மொத்தம் ரூ.67.36 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகள் பொதுமக்களின் பயன் பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் அரசு, உதவி செயற்பொறியாளர் முருகேசபாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.